தீபக் ஹூடாவிற்கு பயிற்சியை நிறுத்திவிட்டேன் ; இதுதான் முக்கியமான காரணம் ; பயிற்சியாளர் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதனை தொடர்ந்து இன்னும் ஐந்து நாட்களில் தொடங்க உள்ளது ஆசிய கோப்பை 2022 போட்டிகள்.

அதற்காக இந்திய, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இந்து நாடுகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்பு ஆறாவது அணியாக (ஐக்கிய அரபு, குவைத் , சிங்கப்பூர் அல்லது ஹாங் காங்) போன்ற அணிகளில் ஏதாவது ஒரு அணிதான் இறுதி இடத்தை கைப்பற்றும்.

இந்திய அணி :

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை ரோஹித் சர்மா தான கேப்டனாக வழிநடத்தினார். அதில் இந்திய அணி தான் கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு கோப்பையை வெல்லுமா ?

தீபக் ஹூடா :

கடந்த சில போட்டிகளாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் தீபக் ஹூடா. சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடாத நிலையில் தீபக் ஹூடா இடம்பெற வேண்டுமென்று ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

அதேபோல தான் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். சிறந்த மிடில் ஆர்டர் ஆர்டராக திகழும் இவர், ப்ளேயிங் 11ல் இடம்கிடைக்குமா என்று கேட்டால் நிச்சியமாக சந்தேகம் தான். விராட்கோலி ஏதாவது போட்டியில் விளையாடமால் இருக்கும்போது தான் தீபக் ஹூடா அல்லது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் தீபக் ஹூடாவின் பயிற்சியாளர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.ஸ்ரீதர் கூறுகையில் ; “அவர் அண்டர் 19 போட்டிகளில் விளையாடும் போது இருந்தே எனக்கு நன்கு தெரியும். நான் அப்பொழுது பயிற்சியாளராக இருக்கும்போது எப்பொழுதும் தீபக் ஹூடா சுறுசுறுப்பாகவே தான் இருப்பார்.”

“அது மட்டுமின்றி எப்பொழுதும் கடினமாக விளையாட கூடிய வீரரும் கூட. நான் எப்பொழுதும் தீபக் ஹுடாவை கோச் கில்லர் என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் தீபக் ஹுதாவிற்கு எப்பொழுது பயிற்சி செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்.அதுமட்டுமின்றி என்னிடம் (ஸ்ரீதர்) அதிரடியாக விளையாடி பார்க்கலாம் என்பதை பற்றி மட்டுமே தான் தீபக் ஹூடா பேசுவார்.”

“நாங்க விளையாட செல்லும்போது அவரை வர வேண்டாம் என்று நான் சொல்லிவிடுவேன். ஏனென்றால் எப்பொழுதும் தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி விலை உயர்ந்த பந்துகளை துளைத்துவிடுவார். அதன் காரணமாகவே நான் அவரை
குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீதர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here