இரு தினங்களுக்கு முன்பு உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் குறிப்பாக நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, ஜிம்பாபே, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதனால் முக்கியமான போட்டிகள் வருகின்ற 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டுமென்று முடிவு செய்த காரணத்தால் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்றே ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தால் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் செய்து முடிவு செய்தனர். அதனால் வேறு வழியில்லாமல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் 186 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57, சூரியகுமார் யாதவ் 50 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய ஆஸ்திரேலியா அணி 180 ரன்களை அடித்தனர். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி.

இந்த போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் போது சூரியகுமார் யாதவ் சொன்ன வார்த்தை இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி என்ன சொன்னார் ? சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் பார்ட்னெர்ஷிப் செய்து கொண்டு இருந்த நேரத்தில் அக்சர் பட்டேலிடம் “இன்னைக்கு எனக்கு அடித்து விளையாடவே Mood இல்லை நண்பா என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.”
@surya_14kumar – Maarne ka mood hi nahi ho raha yaar
Got out very next ball #AUSvIND #T20WorldCup #T20WorldCup2022 pic.twitter.com/TWBM2zSAtA— Aditya Kukalyekar (@adikukalyekar) October 17, 2022
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழும் சூரியகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடும் ஒரே வீரராக தான் சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.
சூரியகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை போட்டிகளில் உதவியாக இருக்குமா ? இல்லையா ?
0 Comments