AB.de.Villiers மட்டுமில்லை, இவங்க இரண்டு பேரும் தென்.ஆப்பிரிக்கா அணியில் விளையாட போகிறார்கள்…! அப்படி என்றல் No .1 Team-ஆ வந்திருவார்கள்..! ; க்ரீம் ஸ்மித் உறுதி..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஐபிஎல் 2021, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சில வீரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்பட்டுள்ளது. அதனால் ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்திவைத்துள்ளார்.

360 பேட்ஸ்மேன் என்றால் அது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும் ஏபி.டி.வில்லியர்ஸ் என்று. ஐபிஎல் 2021, 7 போட்டியில் விளையாடி 207 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 76 ரன்களை அடித்துள்ளார். இவரது முக்கியமான பங்களிப்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

ஆனால் ஏபி.டி.வில்லியர்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். ஆனால் இப்பொழுது அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடி வருகிறார். ஆனால் இப்பொழுது அவரை மீண்டும் தென்.ஆப்பிரிக்கா அணியில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதேபோல, எனக்கும் இந்த முறை டி-20 உலகக்கோப்பை போட்டியில் நான் விளையாட ஆசை படுகிறேன். அதற்கான முடிவுகள் நான் விரைவில் எடுப்பேன் என்று ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற்ற போது ஏபி.டி.வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் தென்.ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான க்ரீம் ஸ்மித், அளித்த பேட்டியில் ; ஜூன் மாதத்தில் தென்.ஆப்பிரிக்கா அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2 டெஸ்ட் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாட போகிறார்கள். அதில் ஏபி.டி.வில்லியர்ஸ் மட்டுமின்றி இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் ஆகிய மூன்று நபரும் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான போட்டியை வைத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பைக்கான போட்டியில் ஏபி.டி.வில்லியர்ஸ், நிச்சியமாக தென்.ஆப்பிரிக்கா அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.