தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரருக்கு இனிமேல் ஐபிஎல் போட்டிகளில் கூட வாய்ப்பு இருக்காது போல…!!!

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே விளையாட்டு அது கிரிக்கெட் போட்டி மட்டும் தான், அதில் இந்திய அணிக்காக 11 பேர் கொண்ட அணியில் விளையாடுவது என்பது மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம். சமீபத்தில் தான் இந்திய அணியில் இடம்பெற்றார் , ஆனால் வாய்ப்பு என்பது கிடைக்காமல் இருக்கிறது. யார் அந்த வீரர் ???

நம்ம தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 யில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு பெரிதும் வாய்ப்புகள் வழங்கவில்லை. ஏனென்றால் அவரது பவுலிங் அனைவரையும் கவரும் வகையில் இல்லையே என்பது தான் காரணமாக இருக்கலாம் ..!

அதுமட்டுமின்றி இப்பொழுது நடந்து முடிந்த ஐபிஎல் 2020 முதல் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் விளையாட முடியாமல் போனது. பின்னர் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது அவருக்கு காரொனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு பதிலாக உமர் மாலிக் இடம்பெற்றார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை இறுதி போட்டியில் கர்நாடக அணியை எதிர்கொண்டது தமிழக அணி. அதில் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை கைப்பற்றி கொடுத்தார் தமிழகத்தை சேர்ந்த ஷாரூக்கான். ஆனால் அந்த இறுதி போட்டியில் பவுலிங் செய்த இந்திய அணியின் வீரரான நடராஜன் 4 ஓவர் பந்து வீசி 44 ரன்களை கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

ஒரு சிறந்த பவுலருக்கான திறமை விக்கெட்டை கைப்பற்றுவதை விட, ரன்களை முடிந்த வரை கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான். ஏனென்றால் 1 ஓவருக்கு 30 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினாலும் அதில் பயன் இல்லாமல் போய்விடும். இதேபோல், நடராஜன் தொடர்ந்து விளையாடினால் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா ???

அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022யில் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த நடராஜன் தக்க வைத்துக்கொள்ள படுவாரா ?? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!! நடராஜன் இந்திய அணியில் இடம்பெறலாம் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் ~?? உங்கள் கருத்தை மறக்காமல் Comments பண்ணுங்க….!!!