நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது இந்திய மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.


அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸ் -ல் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் வலுவாக இருக்கும் என்று நினைத்தால், எதிர்பாராத விதமாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதில் கே.எல்.ராகுல் 12 ரங்கா மற்றும் மயங்க் அகர்வால் 15 ரன்களை மட்டுமே அடித்தனர்.
பின்னர் கேப்டனான விராட்கோலி தான் முடிந்த வரை 201 பந்துகளை எதிர்கொண்டு அதிகபட்சமாக 79 ரன்களை அடித்தார். அதனால் 77.3 ஓவர் முடிவில் 223 ரன்களைஅடித்துள்ளது இந்திய அணி. அதில் புஜாரா 43, ரஹானே 9, ரிஷாப் பண்ட் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ஷர்டுல் தாகூர் 12, பும்ரா 0, உமேஷ் யாதவ் 4, முகமது ஷமி 7 ரன்களை அடித்துள்ளனர்.


அதனை அடுத்து தென்னாபிரிக்கா அணி இப்பொழுது முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது. அதில் இதுவரை 8 ஓவரில் 17 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது தென்னாபிரிக்கா அணி. என்ன இவர் இப்படி பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
அது நம்ம ரஹானே தான், வேறு யாருமில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்-களை சேர்த்து 68 ரன்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ரன்களையும், இப்பொழுது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதாவது நேற்று நடந்த போட்டியில் 9 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.


ஆனால் ரஹானே இப்பொழுதெல்லாம் சரியாகவே விளையாடுவது இல்லை. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். அதனால் அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றால் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அமைய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி கொண்டு வருகிறார் ரஹானே.
இதற்கு மேல் அவருக்கு வாய்ப்பு வளங்கப்படுமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பதிவு செய்யுங்கள்.