HomeTrending NewsWI அணிக்கு எதிரான போட்டியில் இவர் இல்லையா ? இவர் இல்லாமல் எப்படி ? கடுப்பான...

WI அணிக்கு எதிரான போட்டியில் இவர் இல்லையா ? இவர் இல்லாமல் எப்படி ? கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள் ;

ஜூலை 22ஆம் தேதி நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாட உள்ளனர். அதற்கான அணியை பிசிசிஐ சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அறிவித்தது. அதில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷானி, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங்.

18 பேர் கொண்ட இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாட இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், சஞ்சு சாம்சன் அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 77 ரன்களை விளாசினார். அதனால் தான் இந்தியா கிரிக்கெட் அணியால் தொடரை கைப்பற்ற முடிந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆகி சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் சஞ்சு. அதிரடியாக விளையாடும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இந்தியாவுக்காக பெரிய அளவில் போட்டிகளில் இடம்பெறவில்லை என்பது தான் உண்மை.

இதுவரை 1 ஒருநாள் போட்டியில் விளையாடி 46 ரன்களையும், 14 டி-20 போட்டிகளில் 251 ரன்களையும் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் பும்ரா, விராட்கோலி போன்ற சில முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டி-20 போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மிகவும் முக்கியமான வீரரா ? யாருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img