RCB அணியின் கேப்டனாக போகிறார் நட்சத்திர வீரர் ; விராட்கோலிக்கு வந்த சோதனை !! யார் அந்த கேப்டன் ?

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. ஆமாம்…!அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் தான்.

அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி நவம்பர் இறுதியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. அதில் சில வீரர்கள் எதிர்பார்த்த ஒன்று தான், மற்ற சிலர் எதிர்பாராத வீரர்கள் தக்கவைத்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி தான் சிறப்பாக வழிநடத்தி வந்தார். இதுவரை 14 முறை ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் ஒருமுறை கூட விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி கோப்பையை வென்றதே இல்லை.

கடந்த ஆண்டு ஐபிஎல் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமிரக்தில் நடந்து கொண்டு இருந்த போது, நான் ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு பிறகு டி20போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக அவரே (விராட்கோலி) அறிவித்தார். அது ஐபிஎல் டி20 போட்டிக்கும் பொருந்தும்.

அதனால் ஐபிஎல் டி20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பெங்களூர் அணியின் ப்ளேயர் ஆக மாறியுள்ளார் விராட்கோலி. அதனால் அடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பெங்களூர் அணியின் முன்னணி வீரரான டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதனால் பெங்களூர் அணியை யார் தலைமை தாங்க போகிறார் ? ஐபிஎல் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டு அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்ட காரணத்தால் அவரால் ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாட முடியமால் போனது. அதனால் ஐயருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் சிறப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தக்கவைகவில்லை.

அதனால் நிச்சியமாக ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயர்-ஐ கைப்பற்ற நிச்சியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முயற்சி செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுபவம் வாய்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக நல்ல ஒரு அணியாக பெங்களூர் அணி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

விராட்கோலி க்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றால் சிறப்பாக அணியாக இருக்குமா ?? இல்லையா ???உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here