ஐபிஎல் போட்டியே இன்னும் தொடங்கவில்லை ; அதற்குள் ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற போகும் அதிரடி வீரர் ;

0

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். பின்பு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. சமீபத்தில் தான் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

ஐபிஎல் தொடரில் அதிரடியான பல வீரர்களை வைத்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது பெங்களூர் அணி. இந்த பெங்களூர் அணியை பல ஆண்டுகளாக விராட்கோலி தான் கேப்டனாக வழிநடத்தி கொண்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் டூப்ளஸிஸ் -ஐ கைப்பற்றிய பெங்களூர் அணி அவரை கேப்டனாகவும் அறிவித்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடரில் சிறப்பாக விளையாடினாலும் சாம்பியன் படத்தை வெல்ல முடியாத நிலையில் தான் பெங்களூர் அணி இருக்கிறது.

காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் பாதிக்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கும் வீரர் :

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் பெங்களூர் அணியால் 11 கோடி விலைக்கு கைப்பற்ற பட்டார். பின்பு சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தக்கவைத்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட்கோலி மற்றும் மேக்ஸ்வெல்-ன் பார்ட்னெர்ஷிப் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் நம்பிக்கையான மிடில் ஆர்டர் இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் காயம் காரணமாக 10க்கு மேற்பட்ட போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அணியின் விவரம் :

விராட்கோலி, மேக்ஸ்வெல், டூப்ளஸிஸ், முகமத் சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்க, தினேஷ் கார்த்திக், அகமத், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஹேசல்வுட், மஹிபால் லொம்ரோர், பின் ஆலன், கரண் சர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லே போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரசிகர்களுக்கு கேள்வி ?

பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல் விளையாடாத பட்சத்தில் யார் இடம்பெற்றால் பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here