ஐபிஎல் 2021; இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மீதமுள்ள 31 ஐபிஎல் 2021 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக முறையில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
அதனால் அனைத்து ஐபிஎல் வீரர்களும் ஐக்கிய அரபு நாட்டில் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். ஐபிஎல் வீரர்களை பற்றி ஐபிஎல் அணிகளை பற்றி அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல, இலனாகி அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ” எனக்கு முதலில் ஐபிஎல் வாய்ப்பு யாருமே கொடுக்கவில்லை” , ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தான் எனக்கு முதல் மாடுகளில் வாய்ப்பு கொடுத்தார். அப்பொழுது நான் சர்வதேச போட்டியில் இருந்து விலகிவிட்டேன்.
ஆனால் 2013ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே என்னிடம் பேசுனார். அப்பொழுது நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுறிங்களா ? என்று கேட்டார். அதற்கு நான் வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக அதனை சரியாய் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார் முத்தையா முரளிதரன்.
முதலில் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாடினேன். ஆனால் 2012ஆம் ஆண்டு அணில் கும்ப்ளே தான் என்னை ஆர்.சி.பி அணியில் எடுத்தார். எனக்கு 11 பேர் கொண்ட அணியிலும் அவர் தான் வாய்ப்பு கொடுத்தார் என்று கூறியுள்ளார் முரளிதரன்.,
இவர் ஆர்.சி.பி அணியில் இருக்கும் போது நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வீட்டோரி தான் கேப்டனாக இருந்துள்ளார். அதன்பிறகு தான் விராட்கோலி கேப்டன் பதவி ஏற்றார். இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை ஆர்.சி.பி.
2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டி வரை வந்த ஆர்.சி.பி அணி அதன்பின்னர் ப்ளே -ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு 4வது இடத்தை பிடித்தது ஆர்.சி.பி அணி. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டியில் 3வது இடத்தில் உள்ளது ஆர்.சி.பி அணி.