ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றனர். சூப்பர் 12 நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் பல சுவாரஷியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குரூப் B-யை சேர்ந்த இந்திய அணி 1 போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்து, புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அப்படி என்ன செய்தது பாகிஸ்தான் அணி ?
நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் எப்பையும் போல் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணிக்கு சற்று சோர்வான தொடக்கத்தை ஏற்படுத்தினாலும், பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 134 ரன்களை அடித்துள்ளனர்.
அதில் குப்டில் 17, மிச்சேல் 27, கேன் வில்லியம்சன் 25, நீசம் 1, கான்வே 27, பிலிப்ஸ் 13, சண்ட்னர் 6 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் பாகிஸ்தான் அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் 18.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான். இப்பொழுது புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.
இதற்கிடையே, இந்திய அணி 5வது இடத்தில் உள்ளது. ஒருவேளை நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு ஆபத்தாக இருந்திருக்கும். ஏனென்றால் வரும் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கும்.
ஆனால் நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இந்திய அணிக்கு முதல் இரண்டு இடத்தை பிடிப்பதில் சிக்கல் ஏறப்டாது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா போன்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் சுலபமாக வெற்றிபெற முடியும்.
குரூப் Bயில் முதல் இரண்டு இடங்களில் இந்திய அணி இடம்பெறுமா ?? என்று உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!!