பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு கிடைக்க போகும் அதிர்ஷ்டம் ; தக்கவைத்துக்கொள்ளுமா இந்திய ?

0

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அன்று தொடங்கிய முதல் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

முதல் இன்னிங்ஸ் :

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டமா அமைந்தது. டாப் ஆர்டரில் விளையாடி கொண்டு வரும் சாக் கிரேவ்லே , டுக்கெட் மற்றும் போப்பே போன்ற மூன்று வீரர்களும் சதம் அடித்தனர். பின்னர் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 101 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 657 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் சாக் 122, டுக்கெட் 107, ஓலி பாப் 108, ஹார்ரி புரூக் 153, பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணி 155.3 ஓவர் முடிவில் 579 ரன்களை அடித்தனர். அதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ் :

முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் மோசமான நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 35.5 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 264 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 342 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், 96.3 ஓவர் வரை போராடிய பாகிஸ்தான் அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் அணி 268 ரன்களை மதுஎம் அடித்தனர். அதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.

இந்தியாவிற்கு என்ன பலன் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா அணியும், மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும், நான்காவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளனர்.

ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் நிச்சியமாக தோல்விக்கு காரணமாக இருக்கும். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியின் தோல்வி நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சாதகமாக மாறும். இனிவரும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் பாகிஸ்தான் அணியால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படுமா ? ஏனென்றால் சமீபத்தில் ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் டெஸ்ட் தொடரில் ஆவது சிறப்பாக விளையாடுமா ? கடந்த ஆண்டு இறுதி போட்டி வரை விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here