இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் பெண்களுக்கான காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், மாரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.


அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தவித்து வந்தனர். இதற்கிடையில் மழை பெய்த காரணத்தால் 18 ஓவருக்கு போட்டி மாற்றப்பட்டது.
அதனால் 18 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 99 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் முனீபா அலி 32, ஜாவேத் 0, சோஹேல் 10, ஆயிஷா நசீம் 10, அழிய ரியாஸ் 18, பாத்திமா சனா 8 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி.


அதில் ஓப்பனிங் பேட்டிங் செய்த ஸ்ம்ரிதி மந்தன இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 63 ரன்களை அடித்துள்ளார். அதனால் இந்திய அணியால் சுலபமாக 100 ரன்களை அடிக்க முடிந்தது. சரியாக 11.4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 102 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.
இதில் சினே ரானா மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்து முக்கியமான பாகிஸ்தான் வீராங்கனையின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் பாகிஸ்தான் அணியை சுலபமாக 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த ஆண்டு காமன் வெல்த் போட்டியில் இதுதான் இந்திய அணியின் முதல் வெற்றி.


குரூப் ஏ பிரிவில் இந்திய, பார்படாஸ், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், “பி” பிரிவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதில் இரு குரூப் ல் யார் யார் முதல் இரு இடங்களில் இடம்பெறுகிறார்களோ, அவர்கள் தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெல்லுமா ?