இந்த காரணத்தால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தார்கள் ..! ஆனால் இப்போ அதுவும் இல்லை..! ; சோகத்தில் பேசிய பேட் கம்மின்ஸ்; முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி சிறப்பான முறையிலும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வேறு வலி இல்லாமல், ஐபிஎல் 2021 போட்டிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

சில நாடுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ஒரு போட்டியை ரத்து பிசிசிஐ, கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்பு பிசிசிஐ உத்தரவு படி அனைத்து அணிகளிலும் இருக்கும் அனைத்து வீர்ரகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு, சன்ரைசர்ஸ் ஐராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தல ஒருவருக்கு காரோண இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக ஐபிஎல் 2021 போட்டியை நிறுத்தியுள்ளது பிசிசிஐ.

எப்பொழுது ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் ?

வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் டி-20 உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெற உள்ளது. அதனால் அந்த நேரத்தில் அனைத்து வீரர்களும் ஒரே இடத்தில் இருப்பார்கள். அதனால் டி-20 உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு ஐபிஎல் 2021,மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

பேட் கம்மின்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி;

ஒரு சிலர் மட்டுமே இந்திய இருக்கும் இந்த சூழ்நிலையில் எதற்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது? ஐபிஎல் போட்டி வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் எனக்கு வரும் செய்தியை பார்த்தால், ஐபிஎல் போட்டி நடைபெற்றது சரிதான்.

ஏனென்றால், இந்தியாவில் பல மக்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். அதனால் இரவு நேரத்தில் அவர்களுக்கு ஒரு 4 மணி நேரம் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர்.

அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் இந்தியாவை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி நான் பழகிய மக்கள் அனைவரும் அற்புதமான நபர்கள் என்று கூறியுள்ளார் பேட் கம்மின்ஸ்.