இவரோட உண்மையான பெயரை விட… பட்ட பெயர் தான் மக்களுக்கு நன்கு தெரியும்…! ; சேவாக் சொன்ன அந்த வீரர் யார் தெரியுமா?

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அன்று ஐபிஎல் 2021 டி- 20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக போட்டியை ரத்து செய்தது பிசிசிஐ.

எப்பொழுது ஐபிஎல் மீதமுள்ள போட்டிகள் நடக்கும் ?

ஐபிஎல் 2021யில் வெறும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் அவசரமாக போட்டிகளை நிறுத்திய பிசிசிஐ, அனைத்து வீரர்களையும் அவரவர் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவைத்துள்ளனர். அதனால் மீதமுள்ள 31 போட்டிகள் உடனடியாக நடக்காது என்றும், ஆனால் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

சேவாக் சொன்ன அந்த வீரர் யார் ?

ஐபிஎல் டி-20 போட்டி என்றாலே பல விறுவிறுப்பான நிகழ்வுகள் அதிக அளவில் நடக்கும். அதிலும் தென்.ஆப்பிரிக்கா அணியின் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆடும் ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அந்த அளவுக்கு அவரது ஆட்டம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அளித்த பேட்டி ஒன்றில் ; தென்.ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் பற்றி கருத்து கூறியுள்ளார். அதில் அவர் சர்வதேச போட்டியில் இருந்து விலகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் அவரது ஐபிஎல் ஆட்டம் ஓய்வு பெற்ற வீரர் போல இருக்காது.

ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடிய ஒரு போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் முதலில் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் உடனடியாக ஆட்டம் இழக்க, ஏ.பி.டி.வில்லியர்ஸ் இறுதிவரை போராடி ஆட்டம் இழக்காமல் 42 பந்தில் 75 ரன்களை விளாசியுள்ளார்.

அவர் எப்பொழுது பேட்டிங் செய்தலும், அவர் எல்ல இடத்திலும் சிக்சர் அடிக்க கூடிய ஒரு அதிரடியான வீரர்தான். அவருடை பெயரை யார் வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் அவரது பட்ட பெயர் ஆன MR.360 என்பது கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.

அதுமட்டுமின்றி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கும் தென்.ஆப்பிரிக்கா அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருகின்ற ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 5 டி-20 போட்டிகளில் களமிறங்கிய போகிறார் ஏ.பி.டி.வில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.