ரசிகர்கள் இனிமேல் இவருடைய Nick Name – வெச்சு தான் கூப்பிட போகிறார்கள் ; இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் குறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் அனைத்து வீரர்களும் சாதனை படைப்பதில்லை. அதேபோல ஒவ்வொரு அணியிலும் சிலர் சிறப்பாக விளையாடுவார்கள். அதில் ஒருவர் தான் ஏ.பி.டிவில்லேர்ஸ் , தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த ஏ.பி.டிவில்லேர்ஸ் அதிரடியான வீரர் என்பதில் சதேகமில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் விலகினார். அதனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஒரு சில வீரர்களுக்கு மட்டும் தான் உலக அளவில் ரசிகர்கள் கிடைக்கும். அதில் ஒருவர் தான் ஏ.பி.டிவில்லேர்ஸ்.

என்னதான் சர்வதேச போட்டியில் இருந்து விலகினாலும், ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் ஏ.பி.டிவில்லேர்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த ஏ.பி.டிவில்லேர்ஸ், ஐபிஎல் 2021 போட்டியில் 7 போட்டிகளில் விளையாடிய ஏ.பி.டிவில்லேர்ஸ் 207 ரன்களை விளாசியுள்ளார்.

அதில் அதிகபட்சமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 75 ரன்களை அதிரடியாக அடித்துள்ளார் ஏ.பி.டிவில்லேர்ஸ். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர சேவாக் அவரது கருத்தை கூறியுள்ளார்.

ஏ.பி.டிவில்லேர்ஸ் பற்றிய பேசிய சேவாக் ; இனிமேல் நம்ம ஏ.பி.டிவில்லேர்ஸ் – ஐ அவரது புனை பெயர் வைத்து தான் கூப்பிட வேண்டும். கிரிக்கெட் ரசிகர்கள் அவரை Mr.360 என்று தான் கூறி வருகின்றனர். வருங்காலத்தில் அவரது பெயரை விட, புனை பெயர் தான் நிலைவில் இருக்கும்.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.