சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் form-ல இருக்காங்கனு தெரிஞ்சிருச்சு…! விசில் போடுங்க சிஎஸ்கே ரசிகர்களே… ; முழு விவரம்..!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐபிஎல் 2021 போட்டி நாளை முதல் தொடங் உள்ளது. அதனால் நிச்சியமாக கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது. 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று விறுவிறுப்பான முறையில் எல்ல ஆண்டுகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் வலுவான அணி என்றல் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் வலுவான பேட்டிங் இல்லை என்பது தான்.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 202 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது. ஐக்கிய அரபு நாட்டுக்கு வந்த ரெய்னா , அவருக்கு சில முக்கியமான பிரச்சனை காரணமாக அவர் ஐபிஎல் 2020 போட்டிகளில் இருந்து விளையாடாமல் இந்திய திரும்பினார்.

அதனால் அவர் இடத்தில சரியான வீரர் அமையாதது தான் முக்கியமான காரணம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 ஏலத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி, ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் சென்னை அணியில் இணைந்துள்ளனர். அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு காம்பேக் தரும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

13 சீசனில் சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு தான் முதல் முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தேர்வாகாமல் போய்விட்டது . அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீரர்களும் சோகத்தில் மூழ்கினார். அதனால் இந்த ஆண்டு காம்பேக் கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள்.

எல்ல அணிகளும் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். எல்ல அணிகளும் அவரவர் சமூகவலைத்தளங்களில் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்துள்ளது.

அதில் தோனி, ரெய்னா ஆகிய இருவரும் அருமையாக பேட்டிங் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி டெஸ்ட் தொடரின் நாயகன் புஜாரா சில பௌண்டரி ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி நம்ம தல தோனி அருமையாக விக்கெட் கீப்பர் செய்துள்ளார்.

இந்த விடியோவை பார்க்கும்பொழுது சிஎஸ்கே அணி நிச்சியமாக நல்ல ஒரு வலுவான அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.