தோனி கேப்டனாக இருந்த நேரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விட முக்கியமான மூன்று வீரர் ;

0

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வருகிறது. உலக கிரிக்கெட் அட்டவணையில் முதல் இடத்திலும் இருந்துள்ளது இந்திய. அதற்கு முக்கியமான காரணம் கபில் தேவ், கங்குலி, தோனி இவர்களாக தான் இருக்க முடியும். ஏனென்றால் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தான் முதல் முதலாக உலகக்கோப்பையை வென்றது.

அவரை தொடர்ந்து கங்குலி தலைமையில் சிறந்த ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டது. பின்னர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி அனைத்து விதமான ஐசிசி கோப்பையும் இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை தோனி மட்டுமே கேப்டனாக வழிநடத்தி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்ற கேப்டனாக திகழ்கிறார்.

கேப்டனாக விளையாடி தோனி பல வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எப்பொழுதும் தோனி ஒரு அணியை தேர்வு செய்தால் அதில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தவே மாட்டார். அதனால் ஒரு வீரர்களுக்கு பல முறை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் பலர் விளையாட ஆசைப்பட்டுள்ளனர். இருப்பினும் வாய்ப்புகள் கிடைத்தும் தனது திறமையை வெளிப்படுத்தாமல் போன, முக்கியமான மூன்று வீரர்களின் விவரம் இதோ ;

யூசப் பதான் :

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அப்பொழுது தான் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக உருவெடுத்தார். அவ்வப்போது தோனி தலைமையிலான இந்தியா அணியில் இடம்கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாடிய யூசப், 2010ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 96 பந்தில் 123 ரன்களை விளாசினார்.

அந்த போட்டியில் இந்திய அணி வெல்ல முக்கியமான காரணமாக இருந்தார் யூசப். அதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா அங்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி 105 ரன்களை விளாசினார். அதுமட்டுமின்றி 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடமபெற்று சிறப்பாகி விளையாடினார்.

ஆனால் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடிய தவறியதால் அவருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானது. இதுவரை யூசப் பதான் மொத்தம் 57 ஒருநாள் போட்டிகளும், 22 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வருண் ஆரோன்:

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். புதிய வீரர் என்றதால் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறாமல் போனார் வருண். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர். என்னதான் வேகமாக பவுலிங் செய்தாலும், ரன்களை கொடுக்காமல் இருந்தால் தான் சிறந்த பவுலர்களுக்கு முக்கியமான ஒன்று.

அதுமட்டுமின்றி, எப்பொழுது பவுலிங் செய்தாலும் ரன்களை அதிகமாகவே கொடுத்துள்ளார் வருண். இவர் இறுதியாக 2014ஆம் ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 11 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றிருந்தார். அதனால் இவருக்கான வாய்ப்பு என்பது குறைந்தது. அதனால் இப்பொழுது இந்திய அணியை விட உள்ளூர் போட்டிகளில் தான் விளையாடி வருகிறார்.

பிரவீன் குமார்:

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்துள்ளார் பிரவீன். இவர் 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். 2008ஆம் நடைபெற போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி ரிக்கி பாண்டிங், ஆடம் கில்க்ரிஸ்ட் போன்ற முக்கியமான வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றிய பிரவீன் குமார், அந்த போட்டியில் ஆட்டநாயகன் படத்தையும் வென்றுள்ளார்.

இவரது அசத்தலான பந்து வீச்சால் ஐசிசி உலகக்கோப்பை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றார். ஆனால் தீடிரென்று காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டையும், 68 ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் பிரவீன் குமார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here