லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் Vs டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள்… லெவன் அணியில் உள்ள வீரர்களின் பட்டியல்!

0


நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மூன்றாவது லீக் போட்டி, இன்று (ஏப்ரல் 1) மாலை 07.30 மணியளவில் லக்னோவில் உள்ள பாரத ரத்னம் ஸ்ரீ அடல் பீஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் விளையாட உள்ள 11 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையிலான அணியில் கையில் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் (Marcus Stoinis), தீபக் ஹூடா, குருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரான், ஆயுஷ் படோனி, மார்க் வூட் (Mark Wood), ஜெய்தேவ் உனட்கட், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், கேப்டன் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, மிட்சல் மார்ஸ் (Mitchell Marsh) , ரிலீ ரோசோவ் (Rilee Rossouw), சர்ஃப்ராஸ் கான் (Sarfaraz Khan), ரோவ்மன் போவெல் (Rovman Powell), அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேட்டான் சகாரியா (Chetan Sakariya), கலீல் அகமது, முகேஷ் குமார் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே, டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here