HomeTrending Newsதயவு செய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நான் பெருமை பட வைப்பேன் ; வாய்ப்பை...

தயவு செய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நான் பெருமை பட வைப்பேன் ; வாய்ப்பை கேட்ட வேகப்பந்து வீச்சாளர் ; அட கொடுமையே ; இவர் தானா ;

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான அணியில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதன் பதிவு இப்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இப்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. அதிலும் முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய இந்திய அணி 202 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 229 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டை கைப்பற்றியது இந்திய.

இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை 35 ரன்கள் அடித்த நிலையில் 2 விக்கெட்டையும் இழந்துள்ளது. ரஹானே மற்றும் புஜாரா போன்ற இரு பேட்ஸ்மேன்களும் பார்ட்னெர்ஷிப் செய்து வருகின்றனர். இந்திய அணி அதிக ரன்களை அடிக்குமா ??

இதற்கிடையில், 30வயதான வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் அவரது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுங்கள் என்பதை போல ஒரு பதிவு செய்துள்ளார்.அதில் எனக்கு சிவப்பு பந்து போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் … உங்களை பெருமை பட வைப்பேன் என்று உறுதியாக கூறியுள்ளார் ஜெயதேவ் உனட்கட்.

இந்திய அணியில் இளம் வீரர் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு காபி வருகிறது பிசிசிஐ. ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் மறுபடி அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகிவிடும். இதுவரை ஜெயதேவ் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்த மாதத்தில் தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை போட்டிகளை சிறிது நாட்கள் தள்ளிவைத்துள்ளது பிசிசிஐ. ஏனென்றால் ஓமிகரன் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது பிசிசிஐ. ஆனால் கூடிய விரைவில் எந்த தாமதமும் இல்லாமல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img