நாளை நடைபெற உள்ள நான்காவது டி-20 போட்டியில் தொடக்க வீரர் இல்லையாம் ; மாற்று வீரர் யாராக இருக்கும் ?

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முடிந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய. அதனை தொடர்ந்து இப்பொழுது டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிலும் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர். மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றிவிடும். அதனால் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். நாளை இரவு 8 மணியளவில் நான்காவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டி சென்ட்ரல் ப்ரோவ்ர்டு பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆமாம், மூன்றாவது போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இருப்பினும் போட்டியின் இறுதியில் அடுத்த போட்டி நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ளது, அதில் இந்த காயம் சரியாகிவிடும் என்று ரோஹித் சர்மா கூறினார்.

இருப்பினும் நாளை நடைபெற உள்ள போட்டியில் ப்ளேயிங் 11 என்னவாக இவருக்கும் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியின் உத்தேச போட்டியின் விவரம் இதோ ;

தொடக்க வீரர்கள் : ரோஹித் சர்மா அல்லது இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ். இந்திய அணியின் கேப்டன் ரோஹிட் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு குறைவு தான். அதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் தான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

மிடில் ஆர்டர் : ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த மூன்று போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பினிஷர்: தோனிக்கு பிறகு இப்பொழுது சிறந்த பினிஷராக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். ஆமாம், இவரது பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் அதிரடியாக விளையாடிய காரணத்தால் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

பவுலர் : ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷதீப் சிங் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அவேஷ் கானுக்கு போதுமான அளவிற்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தது இந்திய அணி. ஆனால் அவரது பவுலிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தான். அதிக ரன்களை மட்டுமே கொடுத்து வந்துள்ளார் அவேஷ் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாளை போட்டிக்கான தொடரை வென்றது போல, டி-20 போட்டிக்கான தொடரிலும் இந்திய அணி வெல்லுமா ??

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here