இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் சில விஷயங்கள் ; ஆனால் 2வது டி20 வெற்றி கிடைக்குமா ?? இரு அணிகளை பற்றி விளக்கமான ஒரு பதிவு ;

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதனால் இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. இன்னும் இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும் தொடரை கைப்பற்றிவிடலாம்.

முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதால் அடுத்த போட்டியில் அதிக நம்பிக்கையுடன் விளையாட போகிறது இந்திய அணி. இருந்தாலும் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களான விராட்கோலி, பும்ரா போன்ற முன்ணனி வீரர்கள் இடம்பெறாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான். ஏனென்றால் முதல் டி20 போட்டியில் 164 ரன்களை அடித்தது நியூஸிலாந்து, அதனை இந்திய அணி இறுதி ஓவரில் தான் 165 ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் நியூஸிலாந்து அணியை குறைத்து எடை போட்டுவிட முடியாது….!!!

முதல் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யாரும் விளையாடவில்லை. இருந்தாலும் விளையாட்டின் சுவாரஸ்யம் குறையவில்லை. அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், அடுத்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது….!!!

முதல் டி20 போட்டியில் , சரியாக விளையாட வீரர்களை சற்றென்று அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. ஏனென்றால் ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரை மதிப்பிட முடியாது. அதுமட்டுமின்றி, உலககோப்பை போட்டிக்கு வீரர்களை தயார் செய்ய வேண்டும்…!! அதுமட்டுமின்றி, இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் அவர் கடந்த போட்டியில் பவுலிங் செய்யவில்லை.

இந்திய அணிக்கு முக்கியமான பிரச்சனையே பவர் ப்ளேயில் விக்கெட்டை கைப்பற்றாதது தான். ஏனென்றால் முதல் டி20 போட்டியில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

அதேபோல, நியூஸிலாந்து அணிக்கும் சில பிரச்சனைகள் உள்ளனர். தொடக்க வீரர்களான மார்ட்டின் குப்டில் மற்றும் சாப்மேன் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால் நியூஸிலாந்து அணிக்கு மிடில் ஆர்டர் சரியாக அமையவில்லை என்பது காபி உண்மை. ஏனென்றால் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான ஜேம்ஸ் நீசம் ப்ளேயிங் 11ல் இடம்பெறவில்லை.

ஒருவேளை நீசம் இடம்பெற்றால் மிடில் ஆர்டர் வலுவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல, சுழல் பந்து வீச்சாளர் டோட் அஸ்டலே -க்கு பதிலாக இஸ் சோதி இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது…!! ஆனால் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்….!!!!