HomeTrending Newsபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அசத்தலான ப்ளேயிங் 11 இதுதான் ; இந்த...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அசத்தலான ப்ளேயிங் 11 இதுதான் ; இந்த தடவை மிஸ் ஆகாது ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஆசிய கோப்பை :

இந்த முறை இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை சில பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் உறுதியான நிலையில், ஆறாவது இடத்திற்கு (குவைத், ஐக்கிய அரபு , சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங்) போன்ற நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி வருகின்றனர்.

அதில் ஹாங் காங் அணி 4 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளனர்.

இந்திய அணி :

indian Team 2

கடந்த 8 ஆம் தேதி தான் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

15 பேர் கொண்ட வீரர்களின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

ஆசிய கோப்பையை விட அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியை தான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆமாம், கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை பெற்றது இந்திய.

அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது தான் உண்மை. அதனால் இந்த முறை இந்திய அணி வெற்றி பெறுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான தொடர் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் தான் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை பெற்றது இந்திய, அதேபோல ஆசிய கோப்பையும் அங்கு தான் நடைபெற உள்ளது…! என்ன செய்ய போகிறது இந்திய..!

அதுமட்டுமின்றி இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் பேட்டிங் செய்வார்கள் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது…! இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11ன் விவரம் இதோ ;

ஓப்பனிங் ஆர்டர் : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்)

மிடில் ஆர்டர் : விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக்

ஆல் – ரவுண்டர் : ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா

பவுலர்: புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.

வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர். இந்த ப்ளேயிங் 11 வீரர்கள் தான் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது… உங்க கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img