HomeTrending Newsமுதல் டி-20 போட்டியில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான் ;...

முதல் டி-20 போட்டியில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான் ; வெற்றிபெறுமா இந்திய ?

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆமாம், நேற்று தான் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து நாளை முதல் டி-20 போட்டிக்கான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி உலகக்கோப்பை டி-20 போட்டிகள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.

அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணி மிகவும் கவனமாக விளையாடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா , பும்ரா, விராட்கோலி போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் களமிறங்க போகும் இந்திய வீரர்கள் யாராக இருக்கும் என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது.

இந்திய அணியின் உத்தேச விவரம் இதோ :

தொடக்க வீரர்கள் : ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் தான் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இஷான் கிஷான் தொடக்க வீரராக பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிக்குள் தொடக்க வீரர்களை இந்திய அணி தயார் செய்தே ஆகவேண்டும். அதனால் நிச்சியமாக அனுபவம் வாய்ந்த ரிஷாப் பண்ட் களமிறங்க தான் வாய்ப்பு இருக்கும்.

மிடில் ஆர்டர் : ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் அவருக்கு பஹ்டிலாக நிச்சியமாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஒருநாள் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பந்தியாவின் அதிரடியான ஆட்டம் நிச்சியமாக இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் தனி ஒருவராக விளையாடி சதம் அடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அதுமட்டுமின்றி ஹர்டிக் பாண்டியாய் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருகிறார்.

பினிஷர் : இப்பொழுது இந்திய அணியின் நம்பிக்கையான பினிஷர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ஏனென்றால் ஐபிஎல் 2022 போட்டியில் இருந்து இப்பொழுது வரை டி-20 போட்டிகளில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். நிச்சியமாகி தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

பவுலர் : ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டியை போலவே டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றுமா இந்திய ?? அல்லது பழிதீர்க்க போகிறதா வெஸ்ட் இண்டீஸ் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img