HomeTrending Newsவெற்றியை கைப்பற்ற போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இதுதான் ; தோல்வியே கிடையாது ;...

வெற்றியை கைப்பற்ற போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இதுதான் ; தோல்வியே கிடையாது ; முழு விவரம் இதோ ;

தொடர் போட்டிகள் :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20, ஒருநாள் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதால் டெஸ்ட் போட்டிக்கான தொடர் சம நிலையில் முடிந்தது. ஆனால் டி-20 போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி :

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11ன் பட்டியல் :

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தான் நிச்சியமாக ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி, இஷான் கிஷான் இப்பொழுது தான் டி-20 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற கணக்கில் இஷான் கிஷானை விட ஷிகர் தவான் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார்.

மிடில் ஆர்டர் : விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட் , ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் உள்ளனர். இதில் விராட்கோலி ஒருவேளை போட்டியில் சரியாக விளையாடாமல் ஆட்டத்தை இழந்தாலும், மீதமுள்ள வீரர்கள் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடிக்க முடியும்.

இந்த ஐந்து வீரர்களில் ஏதாவது இருவர் சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பவுலர்: ஷர்டுல் தாகூர் அல்லது பிரஷித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்கள் முதல் போட்டியில் பங்கு பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதில் ஷர்டுல் தாகூர்-க்கு தான் அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அவரால் பவுலிங் மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்தும் வருகிறார்.

அதுமட்டுமின்றி, முகமத் ஷமி , பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருப்பதால் இந்திய அணிக்கு சிறப்பான பவுலிங் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. டி-20 தொடரை கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் வெற்றிபெறுமா ? இந்திய ?

உங்கள் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img