கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டி இன்னும் இரு நாட்களில் ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வரை இந்தியாவில் கோலாகலமாக நடைபெற போகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் ஒரு மோசமான அணியாக இருந்தது. எல்லாப் போட்டிகளிலும் அணி வீரர்களை மாற்றி கொண்டே இருந்தாலும் வெற்றியை கைப்பற்ற மிகவும் கடினப்பட்டுள்ளனர். அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த சம்பவத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நல்ல வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி மிகவும் கவனமாக இருந்தது. அதனால் புதிதாக மொயின் அலி, கிருஷ்ணாப்ப கவுதம் ,புஜரா மற்றும் ஹரி ஷங்கர் ரெட்டி ,ராபின் உத்தப்ப ஆகிய வீரர்கள் இணைந்துள்ளனர். அதனால் சிஎஸ்கே அணியில் நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் இருக்கிறது என்று சிஎஸ்கே பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் ; புஜரா , டெஸ்ட் போட்டிகளின் நாயகன். அவர் கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடி உள்ளார். எனக்கு புஜராவை மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு தெரிந்து சிஎஸ்கே அணியில் முதல் சில போட்டிகளில் நிச்சியமாக அவர் விளையாட வாய்ப்பு இல்லை. ஒருவேளை ஏதாவது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவரை விளையாட அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் கொடுத்து சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ,முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற போகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள், சிஎஸ்கே அணியின் காம்பேக் பற்றி அவளோடு எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றன.