Gayle -க்கு படம் காட்டி Stump-பை தெரிக்கவிட்ட ரபாட….! வைரலாகும் வீடியோ..!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் விக்கெட்டை தெரிக்கவிட்ட ரபாட…! வைரலாகும் வீடியோ பதிவு..!!

ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டியின் 29வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியுள்ளன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 167 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் மயனக் அகர்வால் 99 ரன்கள், பிரபாசிம்ரன் 12 ரன்கள், கிறிஸ் கெயில் 13 , டேவிட் மலன் 26 ரன்கள், தீபக் ஹூடா 1 ரன்களை விளாசியுள்ளார். பின்பு 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழந்த நிலையில் 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

அதில் ப்ரித்வி ஷாவ் 39 ரன்கள், தவான் 69 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள், ரிஷாப் பண்ட் 14 ரன்களை அடித்துள்ளனர். வெற்றியை கைப்பற்றிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 6வது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாட வீசிய பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் ஆட்டம் இழந்தார். 5வது ஓவரில் பந்து வீசிய ரபாட… அதனை கிறிஸ் கெயில் எதிர்கொண்டார். அப்பொழுது அதனை அடிக்க முயன்ற கிறிஸ் கெயில் விக்கெட் ஸ்டும்ப்-ல் பட்டு ஆட்டம் இழந்தார். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. வீடியோ இதோ…;

144 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்டும்ப் தெரிச்சு போயிடுச்சு…. ! அதனால் விக்கெட் இழந்த கிறிஸ் கெயில் மிகவும் சோகத்தில் மூழ்கினார். அதனால் கிறிஸ் கெயில் 9 பந்தில் 13 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.