WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இறுதிவரை போராடிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.
இந்தியாவின் தோல்வி, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு 2020 இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், பின்னர் இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் வென்று மாஸ் காட்டியது இந்திய அணி.
அதனால் நிச்சியமாக நியூஸிலாந்து அணியை வென்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை பெரும் என்று நினைத்து கொண்டு இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இதனை குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா…!
இவரது ஆட்டத்தில் நம்பிக்கையே இல்லை என்று கூறியுள்ளார். யார் அந்த வீரர் ?? இந்திய அணியில் பேட்டிங் வீர்ரகளான விராட்கோலி, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய மூவரும் விரைவாக அவர்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நான் பெரிய போட்டி ஒன்று விளையாடும் போது, முக்கியமான விக்கெட்டை கவனமாக இருப்பது உண்டு. அதில் விராட்கோலி, ரஹானே மற்றும் புஜாரா ஆகிய மூவரும் நன்றாக விளையாடினார்கள். அதிலும் ரஹானே முதல் இன்னிங்ஸ் போட்டியில் 49 ரன்களை அடித்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஆட்டம் இழந்தார். ரஹானே பேட்டிங் செய்வதில் நம்பிக்கையே இல்லை. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதாக கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.