இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு இறுதி நேரத்தில் பதிவு செய்த முன்னாள் வீரர் ; சந்தோஷத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதுவும் இந்த முறை இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த உலகக்கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி ஓய்வு பெற போகிறார். அதனால் அவருக்கு அடுத்தது யார் தலைமை பயிற்சியாளராக வர போகிறார் என்று பல கேள்விகள் எழுந்தன.

அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்.லட்சுமன் தான் பயிற்சியாளராக வர போகிறார் என்ற தகவல் வெளியானது. அதனை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வி.வி.எஸ்.லட்சுமன் -க்கு சரியாக அணிகளை தேர்வு செய்யவே தெரியவில்லை என்று பல கருத்துக்கள் எழுந்தன.

ஆனால் நம்ம டெஸ்ட் போட்டியின் கிங் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இறுதி நேரத்தில் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பதிவு செய்துள்ளார். இதனை பற்றி பேசிய பிசிசிஐ உறுப்பினர் ; ஆமாம்..!! ராகுல் டிராவிட் பதிவு செய்துள்ளார். இது ஒரு சம்பிரதாயம் தான்.

யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கூடிய விரைவில் அதற்கான தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிக்கான சீரியஸ் கைப்பற்றியது.

ஆனால் டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது இந்திய. ஆனால் அதற்கு முக்கியமான காரணம் சில வீரர்களுக்கு தொற்று உறுதியானது. அதனால் முக்கியமான வீரர்கள் யாரும் இல்லாமல் விளையாடியதால் மட்டுமே இந்திய அணிக்கு தோல்வி. அதுமட்டுமின்றி, பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தால் சிறப்பாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும் என்று அவரவர் கருத்துகளை சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் கருத்து என்ன ?? இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வர வேண்டும் என்று COMMENTS பண்ணுங்க…!!!!