செஃப் ஆக மாறிய சின்ன தல அதனை சுவைக்கும் பெரிய தல; Cook with raina..! வைரலாகும் .புகைப்படம்….!

வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் 2021 (14வது) ஆண்டு போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் ஐபிஎல் 2021 போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் , இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஐபிஎல் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் என்று பிசிசிஐ கூறியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

சிஎஸ்கே அணியின் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு கோப்பை வெல்ல வேண்டும் என்று மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளார் சிஎஸ்கே அணி வீரர்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஏலத்தில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பதால், நிச்சியமாக நல்ல ஒரு அணியாக மாறி கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சிஎஸ்கே அணியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போழுது சிஎஸ்கே அணியின் வீரர்கள் பற்றிய அப்டேட் ஆன புகைப்படம் மற்றும் விடியோக்கள் பகிரவது வழக்கம். அதில் சமீபத்தில் வெளியான வீடியோ; சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதியஆடையை அறிவிக்கும் வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் ; தோனி , ரெய்னா, மற்றும் பிராவோ இருக்கும் பபுகைப்படம் வெளியானது. அதில் ரெய்னா கண்ணைக்கட்டிக்கொண்டு சமைப்பது போலவும் , தோனி மற்றும் பிராவோ அதனை சாப்புடுவது போலவும் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஒரு ஒரு செய்தியையும் மகிழ்வித்து வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.