இவர் அணியில் இருக்கும் வரை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய நன்மை ; அஜித் அகர்கர்…! யார் அவர் தெரியுமா ?
இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை வெற்றிகரமாக 13ஆண்டுகள் ஐபிஎல் போட்டி நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியளில் 7வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் வெறியேறியது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் இருந்தனர்.
அதற்கு முழு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் சரியாக இல்லை என்பதுதான். ஏனென்றால் சுரேஷ் ரெய்னா ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய சொந்த காரணத்தால் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து மீண்டும் இந்திய திரும்பினார். அதனால் அவரால் சிஎஸ்கே அணியில் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் விளையாடும் வாய்ப்பை தவரவிட்டார். சுரேஷ் ரெய்னா இல்லாததால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் ஏலத்தில் புதிதாக மொயின் அலி , கிருஷ்ணாப்ப கவுதம் , ஹரி ஷங்கர் ரெட்டி, ராபின் உத்தப்ப போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனை பற்றி முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரரை பற்றி கருத்து கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா மிகவும் முக்கியமான வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி மிடில் ஆர்டரில் சரியான பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் பல போட்டிகளில் தோல்விகளை சந்தித்தது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் போய்விட்டது.
ரெய்னா இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருப்பது, நல்ல ஒரு நன்மை . முதல் போட்டியிலேயே ரெய்னா டெல்லிக்கு எதிரான போட்டியில் ரெய்னா அதிரடியான முறையில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி ரெய்னாவின் ரன்கள் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 500+ நாட்கள் கழித்து பேட்டிங் செய்தது போல தெரியவில்லை. ஏனென்றால் நீண்ட நாள் கழித்து எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் ரெய்னா என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர்.