ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து வெளியேறிய…! அதிரடி வீரர்…! ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் ..!

ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து வெளியேறிய…! அதிரடி வீரர்…! ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் ..!

ஐபிஎல் 2021 : இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஐபிஎல் 2021 சீரும் சிறப்புமாக ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சீரும் சிறப்புமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர் அணியில் இருந்து விலகி நாடு திரும்பினார்.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 221 ரன்களை எடுத்துள்ளது. அதில் கே.எல்.ராகுல் 91 ரன்கள், மயங்க அகர்வால் 14 ரன்கள்,கிறிஸ் கெயில் 40 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 64 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் செய்யும்போது , ஒரு கேட்ச் பிடிக்க சென்ற பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டையில் பலமாக அடிபட்டு விட்டது.

இருந்தாலும் அவர் பீல்டிங் செய்தார். அதனால் சிறிது நேரம் கழித்து அவருக்கு பதிலாக வேறொரு வீரர் பீல்டிங் செய்தார். ஆனால் அவரது கை விரலில் பலமான அடிபட்டதால். அவரால் வெறும் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடிந்தது. அடிபட்ட காரணத்தால் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதனை உறுதி செய்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இனி விளையாடமாட்டார். அதனால் பென் ஸ்டோக்ஸ் அவரது நாட்டுக்கு சொல்லப்போகிறார் என்ற செய்தியை கூறியுள்ளனர்.