மீண்டும் ஒருவரா ?? ஐபிஎல் 2021யில் இருந்து வெளியேறிய முக்கியமான வீரர்…! அதிர்ச்சியில் ஐபிஎல் அணி..!! என்ன செய்யப்போகிறது…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி டி-20 ஐபிஎல் போட்டி தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 9ஆம் முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் பல விறுவிறுப்பான போட்டிக்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கத்திருக்கின்றனர்.

இதில் 16 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் இருந்து சில முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் 2021யில் இருந்தே விலகியுள்ளனர். அதில் இப்பொழுது ஒரு முக்கியமான வீரரும் இடம்பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பவுளர் ஜோப்பிர ஆர்ச்சர்.

அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகப்பெரிய குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியாமல் போட்டியை விட்டுவெளியேறினார். அவரது முழங்கையில் பலமாக அடிபட்டதால் அவருக்கு ஜனவரி மதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஜோப்பிர ஆர்ச்சர் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவரின் அறிவுரையால் முதல் சில ஐபிஎல் போட்டிகள் மட்டும் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கூறியது. சில நாட்களுக்கு முன்பு கூட.. ஜோப்பிர ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிக்காக வலைப்பயிற்சி செய்வது போல வீடியோ வெளியானது.

இப்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து முழுமையாக ஜோப்பிர ஆர்ச்சர் விலகியுள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு பதிலாக யார் இடம்பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஜோப்பிர ஆர்ச்சர் மிகச்சிறந்த பவுளர் சந்தேகமில்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் 14 போட்டிகளில் விளையாடிய ஜோப்பிர ஆர்ச்சர் 20 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஜோப்பிர ஆர்ச்சர் இல்லாததால் மீண்டு எழுந்து வருமா ராஜஸ்தான் ராயல்ஸ் ??? அடுத்த போட்டி நாளை ஏப்ரல் 24ஆம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.