ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்!

0

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நெருங்கியுள்ள உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வீரர்கள் அடுத்தடுத்து, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, வீரர் ஒருவர் போட்டியில் இருந்து விலகுவதால், மாற்று வீரரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வீரரைத் தேர்வு செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதால், அணி நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக, முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறி வருவது, இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் இது முதல்முறையாகும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டும் தான் வீரர்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார். தற்போது வரை அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால், நடப்பு ஐ.பி.எல். தொடர் முழுவதிலிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாற்று வீரரைத் தேர்வு செய்வதில், தீவிரம் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சந்தீப் சர்மா (வயது 29), இதுவரை 104 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 114 விக்கெட்டுகளையும், இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் வரிசையில் தற்போது சந்தீப் சர்மா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here