உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அட்டகாசமான தொடக்க ஆட்டம் அமைந்தது.
இளம் வீரரான ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டனான சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று வீரர்களும் அதிரடியாகவும் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 203 ரன்களை அடித்தனர்.
அதில் ஜெய்ஸ்வால் 54, ஜோஸ் பட்லர் 54, சஞ்சு சாம்சன் 55, படிக்கல் 2, ரியன் பிரியாக் 7, ஹெட்மயேர் 22 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது சன்ரைசர்ஸ் அணி.
ஆனால் மோசமான நிலையில் பேட்டிங் செய்து வருகின்றனர். ஆமாம், தொடக்க வீரரான அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் த்ரிப்தி போன்ற வீரர்கள் எந்த விதமான ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளனர்.
சஞ்சு சாம்சன் எடுத்த சரியான முடிவு:
கேப்டனான சஞ்சு சாம்சன் முதல் ஓவர்-ஐ டிரெண்ட் பெல்ட்-யிடம் கொடுத்தார். அதில் அவர் துல்லியமாக பவுலிங் செய்து இரு முக்கியமான கைப்பற்றினார். அதனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பவர் ப்ளே-வில் ரன்களை அடிக்க விடாமல் இருக்க ட்ரெண்ட் பெல்ட்-க்கு மூன்று ஓவர் கொடுக்கப்பட்டது. அதேபோல ராஜஸ்தான் அணிக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 9 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 46 ரன்களை அடித்துள்ளனர்.
இப்படி அருமையாக அணியை வழிநடத்தி கொண்டு வரும் சஞ்சு சாம்சன்-க்கு மட்டும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதே இல்லை ; அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!