இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தடை செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ. ஏனென்றால் இந்திய அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதில் ஒருவாட் தான் ரவி சாஸ்திரி, எப்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை விசாரித்த பிசிசிஐ. அதில் உண்மை வெளியானது. ரவி சாஸ்திரி மட்டும் விராட்கோலி போன்ற சில இந்திய அணியின் சிலர் லண்டனில் உள்ள ஒரு பொது இடத்தில் புத்தகம் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
அதனால் தான் அவருக்கு கொரோனா உறுதியானது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிசிசிஐ அளித்த பேட்டியில் ; டி20 போட்டிககளுக்கு பிறகு ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக போகிறார் என்று கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, பின்பு மீண்டும் இரண்டு ஆண்டுகள் நீடித்து கொண்டார் ரவி சாஸ்திரி.
ஆனால் இதற்கு மேல் அவர் தொடர்வது போல தெரியவில்லை. ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் ஒரு மாதம் முன்பு இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார்.
அதில் ஒருநாள் போட்டி சீரியஸ் போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவும் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில். ஏனென்றால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளது பிசிசிஐ.
ஐசிசி உலகக்கோப்பை டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க அனைத்து நாடுகளும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை இந்திய அணியின் ஆலோசகராக தோனி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.