என்ன இப்படி மாற்றி மாற்றி பேசுறீங்க ?? வசமாக மாட்டிக்கொண்ட ரவி சாஸ்திரி ; இப்படியெல்லாம் பேசலாமா பாஸ் ; முழு விவரம் இதோ ;

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை டி20 2021 போட்டிகள் இறுதி வரை ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். பின்னர் அவருடைய இடத்தை அதாவது தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ராகுல் டிராவிட் பொறுப்பேற்று வருகிறார்.

விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் இருக்கும்போது பல கருத்துக்கள் ரசிகர்கள் இடையே எழுந்தது. சமீபத்தில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் ; மாற்றி மாற்றி பேசி வசமாக மாட்டிக்கொண்டார். முதலில் பேசிய ரவி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மூன்று விக்கெட் கீப்பர் இடம்பெற்றார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. ஆமாம்..! ஒரு அணியில் எதற்கு மூன்று விக்கெட் கீப்பர்.

அவர்களுக்கு பதிலாக ஏதாவது பேட்ஸ்மேன் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதனால் நான் அணி தேர்வு செய்யும்போது நான் எதுவும் சொல்ல விரும்பமாட்டேன். அணியில் வீரர்கள் செய்வதில் என்னிடம் ஏதாவது பேசினால் மட்டுமே நான் அறிவுரை கூறுவேன். அதன் பின்னர் பேசிய அவர், 2017ஆம் ஆண்டு நான் (ரவி சாஸ்திரி) தான் பும்ராவை அணியில் விளையாட வைத்தேன் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் , முதலில் அணியில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்வதில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொன்னார், பின்னர் பும்ராவை தேர்வு செய்தது நான் என்று சொல்லிக்கொண்டு வருகிறார் என்று அவரை பற்றி சமுகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளது.

ரவி சாஸ்திரி இருக்கும் வரை விராட்கோலியின் கேப்டன் பற்றிய கருத்து எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இப்பொழுது ரவி சாஸ்திரி ஓய்வு பெற்ற பிறகு விராட்கோலி டி20 கேப்டனாக இருந்து விலகினார். ஆனால் இப்பொழுது பிசிசிஐ -யே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் நிக்கியுள்ளனர்.

ரவி சாஸ்திரிக்கு பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த முறை ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மாவிடமும் , டெஸ்ட் போட்டியின் கேப்டனாக விராட்கோலியுடனும் சேர்ந்து வேலை செய்ய போகிறார் ராகுல் டிராவிட்.

உங்களுக்கு பிடித்த தலைமை பயிற்சியாளர் யார் ராகுல் டிராவிட் அல்லது ரவி சாஸ்திரி உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க….!!!