HomeTrending Newsநான் செத்துட்டேனா ? மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நான் என்ன செய்ய முடியும் ; ரவீந்திர...

நான் செத்துட்டேனா ? மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நான் என்ன செய்ய முடியும் ; ரவீந்திர ஜடேஜா பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா கடந்த பல ஆண்டுகளாவே இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக தான் திகழ்கிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை அறிமுகம் செய்தனர். அதன்படி முதல் சில போட்டிகளை ரவீந்திர ஜடேஜா வழிநடத்தி வந்தார். ஆனால் பெரிய அளவில் சென்னை அணி வெற்றியை கைப்பற்றவில்லை என்ற காரணத்தால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனியை மாற்றம் செய்தனர்.

பின்பு ரவீந்திர ஜடேவிற்கு காயம் ஏற்பட்டது, அதனால் ஐபிஎல் இறுதி சில போட்டிகளில் ஜடேஜா விளையாடாதது சர்ச்சையானது. அதுமட்டுமின்றி, ஜடேஜா அவரது சமூகவலைத்தளங்களில் சென்னை அணியை பற்றி செய்த பதிவுகளை நீக்கியுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி வருகின்ற டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியில் ஜடேஜா இல்லையென்று பல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜடேஜா முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” உலகக்கோப்பை போட்டியில் நான் விளையாடவில்லை என்ற வந்தந்தியெல்லாம் குறைவான ஒன்று.”

“ஏனென்றால் நான் செத்துவிட்டேன் என்று பல வதந்திகளை வெளியிட்டு வந்தனர். இதை விட பெரியது ஏதாவது இருக்க முடியுமா ? இதனை பற்றி எல்லாம் யோசிப்பதை விட நான் எப்படி இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்று தான் யோசிக்க வேண்டும். நான் எப்பொழுதும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் போன்ற பயிற்சிகளை செய்துகொண்டே தான் இருக்கின்றேன்.”

“நாங்கள் (இந்திய) எப்பொழுதும் பாசிட்டிவ் ஆக விளையாட வேண்டுமென்று தான் யோசனை செய்வோம். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமான ஒன்று. உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் வரை நாங்கள் ஆலா யோசனைகளில் தான் விளையாடுவோம். ஆனால் இப்பொழுது ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறோம். அதனால் இதனை பற்றி மட்டும் தான் இப்பொழுது யோசித்து கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”

அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 2023 ல் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் இருந்து விலகினார் என்று எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை எனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img