வீடியோ ; பாகுபலி போல ராயுடு அடித்த பந்து… ! நொறுங்கியது கண்ணாடி… சுக்கு சுக்க..! போயிடுச்சு…!

ஐபிஎல் 2021, தொடரின் டி-20 லீக் போட்டியின் 27வது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தல மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்க தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழந்த நிலையில் 214 ரன்களை விளாசியுள்ளார். தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் முதல் சில பந்தில் ஆட்டம் இழக்க, அதன்பின்னர் டுபளஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 40 ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்களை விளாசியுள்ளார்.

பின்பு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமைந்தாலும், அதன்பின்னர் நிதானமாக விளையாடினார். ஆனால் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 87 ரன்களை விளாசியுள்ளார். அவரது அதிரடியான ஆட்டமே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த 16வது ஓவரில் பும்ரா வீசிய பந்தை அம்பதி ராயுடு எதிர்கொண்டார். அப்பொழுது ராயுடு அதிரடியாக விளையாடி சிக்சர் அடித்தார். அந்த பந்து மும்பை இந்தியன்ஸ் பெவிலியனில் இல்ல குளிர்சாதன பெட்டியில் பாட்டு கண்ணாடி சுக்கு சுக்க நொறுங்கி போனது. அம்பதி ராயடுவின் அதிரடி ஆட்டமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 200க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்தது.

அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. ;