சிஎஸ்கே போல தான் ஆர்.சி.பி அணியும், அதனால் RCB அணியின் கேப்டன் இவராக தான் இருக்க முடியும் ; முன்னாள் கொல்கத்தா வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கான ஏலம் கடந்த மாதம் தான் சிறப்பாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு போல 8 அணிகள் இல்லாமல், இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர்.

அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விராட்கோலி கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டனாக இருக்க போவதில்லை என்பதை அவரே அறிவித்தார்.

அதனால் அவருக்கு பிறகு இந்திய அணியை ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் சென்னை அணியின் வீரரான டூப்ளஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதனால் அவர் கேப்டனாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; “விராட்கோலி முதலில் ஐபிஎல் மற்றும் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.”

“ஆனால் அது விராட்கோலி நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பத்தியில் இருந்து அவரை வெளியேற்றியது பிசிசிஐ. இப்பொழுது விராட்கோலி எந்த போட்டியிலும் கேப்டனாக இல்லை என்பது தான் உண்மை” ஆகாஷ் சோப்ரா.

“அதனால் இப்பொழுது நிச்சியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிச்சியமாக விராட்கோலியை கேப்டனாக அனைத்து முயற்சிகளையும் கையில் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் எப்படி தோனி மற்றும் சென்னை அணிக்கு இடையே மிகப்பெரிய உறவு இருக்கிறதோ, அதேபோல தான் விராட்கோலிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இருக்கும் “.

“அதனால் இந்த முறை விராட்கோலி வழிநடத்தினால் அதில் எந்த தவறும் இல்லை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம் படிப்படியாக முன்னேறிக்கொண்டே செல்கிறது தான் உண்மை.” ஆகாஷ் சோப்ரா.

மேலும் விராட்கோலி கேப்டனாக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றிய ஆகாஷ் சோப்ரா : விராட்கோலி மட்டும் கேப்டனாக இல்லை என்றால் நிச்சியமாக அவரால் சுதந்திரமாக விளையாட முடியும். அதுமட்டுமின்றி விராட்கோலி-கு வயது ஆகிக்கொண்டே இருக்கிறது. அதனால் அவருடைய மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

அதனால் நிச்சியமாக பெங்களூர் அணி விராட்கோலி-க்கு பதிலாக மாற்று வீரரை தான் கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.