HomeIPLமும்பை இந்தியன்ஸ் அணி இப்படி இருக்க போகிறது ; மும்பை மற்றும் ரோஹித் ஷர்மாவை பற்றி...

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி இருக்க போகிறது ; மும்பை மற்றும் ரோஹித் ஷர்மாவை பற்றி பேசிய டூப்ளஸிஸ் ; பேட்டி வைரல் ; முழு விவரம் இதோ ;

நேற்று இரவு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 18வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதியுள்ளனர். அதில் 12 போட்டிகளில் பெங்களூர் அணியும், 18 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்தனர். அதில் இஷான் கிஷான் 26, ரோஹித் சர்மா 26, ப்ரேவிஸ் 8, சூர்யகுமார் யாதவ் 68, உனட்கட் 13 ரன்களை அடித்துள்ளனர். 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

அதில் கேப்டனுக்கு சரியான போட்டியாக அமையவில்லை என்றாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் 18.3 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்த பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

அதில் அனுஜ் ராவத் 66, டூப்ளஸிஸ் 16, விராட்கோலி 48, தினேஷ் கார்த்திக் 7, மேக்ஸ்வெல் 8 ரன்களை அடித்துள்ளனர். இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது..! ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 9வது இடத்தில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக டூப்ளஸிஸ் ; “உண்மையிலும் மிகவும் மகிழ்ச்சியாக தான் உள்ளது. 18 ஓவரில் 150 ரன்களை அடித்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஏனென்றால் எங்கள் பேட்டிங்-கில் நல்ல ஒரு திறமை உள்ளது.”

“அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சிறந்த அணி தான் அதில் மாற்றம் இல்லை. அவர்களது பவுலிங் உண்மையிலும் சிறப்பாக இருந்ததை நங்கள் உணர்ந்தோம். ரோஹித் சர்மா சிறந்த டி-20 வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று அவரது விளையாட நன்றாக தான் இருந்தது.”

“இருப்பினும் அவரது விக்கெட்டை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்று. ஒருவேளை அவரது விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால் நிலைமை மோசமாக கூட மாறிருக்க வாய்ப்பு உள்ளது. எங்கள் பவுலரான ஆகாஷ் தீப் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்று பேசினார் டூப்ளஸிஸ்.”

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க.. இந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் படத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்ல வாய்ப்புகள் உள்ளதா ? இல்லையா ?? என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img