முதல் தோல்வியில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை…! அதற்குள் இன்னொரு பிரச்சனை- ஆ….!
ஐபிஎல் 2021, ஆரம்பித்த சில நாட்கள் ஆன நிலையில் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், அம்பதி ராயுடு 14 ரன்கள், ஜடேஜா 62 ரன்களை விளாசியுள்ளனர்.
பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு காத்திருந்தது தோல்வியே. முதல் சில ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதன்பிறகு தொடர்ந்து ஆட்டத்தை இழந்தனர்.
அதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 34 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 22 ரன்கள், விராட் கோலி 8 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள், டிவில்லியர்ஸ் 4 ரன்களை அடித்துள்ளனர். 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த பெங்களூர் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2021, இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய அணைத்து போட்டியிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. எந்த ஆண்டு இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு மிகவும் அதிரடியாக விளையாடியுள்ளது பெங்களூர் அணி.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது பெங்களூர் அணி. முதல் தோல்வியில் இருந்தே வெளிவர முடியாத பெங்களூர் அணிக்கு இன்னொரு சோகம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி பந்து வீசும் போது கொடுத்த நேரத்தை விட அதிக நேரத்தை எடுத்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ , அதனால் பெங்களூர் அணி மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.