வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே இவங்க தாங்க..! மாஸ் பண்ணிட்டாங்க..! விராட்கோலி ஓபன் டாக் ;

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று வான்கடே மைதானத்தில் தொடங்கியது நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 325 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூஸிலாந்து அணி 28.1 ஓவர் முடிவில் வெறும் 62 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 276 ரன்கள் எடுத்த நிலையில் Declare செய்தது இந்திய அணி.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய நியூஸிலாந்து அணியால் சரியாக பார்ட்னெர்ஷிப் செய்ய முடியாமல் ஆட்டம் இழந்தனர். ஆனால் 56.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்த காரணத்தால் தோல்வியை சந்தித்துள்ளது நியூஸிலாந்து அணி.

அதுவும் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது இந்திய அணி. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பிறகு ; மீண்டும் வெற்றியை கைப்பற்றியுள்ளோம். இது ஒரு அருமையான போட்டியாகத்தான் இருந்தது.

நாங்கள் எப்பொழுது எதிர் அணியில் எப்படி விளையாடுகிறார்கள் என்று கவனிப்பது வழக்கம் தான். கான்பூர் மைதானத்தில் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து அணியால், மும்பையில் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் பௌன்சர் ஆபத்து வீச்சாளர்கள் மிகவும் அருமையாக பந்து வீசியுள்ளனர், மாஸ் ஆக விளையாடியுள்ளனர். இப்பொழுது எனக்கு இதே போல் அணியை புதிய மேனேஜ்மென்ட் உடன் முன்னேற்ற வேண்டும். அடுத்ததாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளோம்.

அது எங்களுக்கு கண்டிப்பாக சவாலாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் விராட்கோலி. வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அன்று முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க உள்ளது. அங்கு டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி-20 போட்டிகள் அனைத்தும் நடைபெற உள்ளது.