சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிக்கு இவர் தான் காரணம் …..

ஐபிஎல் 2020யில் 29வது போட்டியில் வார்நேர் தலைமையிலான சன்ரைஸ்சரஸ் ஹைதராபாத் அணி மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை வித்தியாசமான ஒரு தொடக்கத்தைஏற்படுத்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி , தொடக்க வீரராக சாம் குரான் மற்றும் டுபிளெசிஸ் ஆட்டத்தை தொடங்கினர்.

சாம் குரான் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி 21 பந்தில் 31 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார், அதில் 4 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்துள்ளார். டுபிளெசிஸ் முதல் பந்திலேயே அவுட் ஆகிவிட்டார். அதன்பின்னர் பேட்டிங் செய்த வாட்சன் 38 பந்தில் 42 ரன்களிலும் மற்றும் அம்பதி ராயுடு 34 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

4வது ஆக களம் இறங்கிய கேப்டன் தோனி அதிரடியாக ஆட நினைத்து 13 பந்தில் 21 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அதில் 2 பௌண்டரி மற்றும் 1 சிக்சர் அதில் உள்ளடங்கும். அதன்பின்னர் களம் இறங்கிய பிராவோ ௦ ரன்களிலும் , ஜடேஜா அதிரடியாக ஆடி 10 பந்தில் 25 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 167 ரன்களை எடுத்துள்ளது சென்னை உச்பேர் கிங்க்ஸ் அணி. 168 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைஸ்சரஸ் ஹைதராபாத்அணியின் வீரர்கள் இறுதிவரை போராடி 20ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

சன்ரைஸ்சரஸ் அணியின் தொடக்க வீரரான வார்னர் (9) ரன்களிலும், பரிஸ்டோவ் (23) ரன்களிலும், மனிஷ் பாண்டே 4ரன்களிலும், கேன் வில்லியம்சன் 57 ரன்களிலும், ப்ரியம் கார்க் 16 ரன்களிலும், விஜய் ஷங்கர் 12 ரன்களிலும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

சென்னை அணியின் சாம் குரான் நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். அதனால் தான் ரன்களை வேகமாக அடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி பௌலிங்கில் ஓவர் விசிய சாம் குரான் வெறும் 18 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அத்துடன் சன்ரைஸ்சரஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான விக்கெட் வார்னர்னை அவுட் செய்துள்ளார்.

அது ஒரு பக்கம் இருக்க , இன்னொருவர் தாகூர் 2 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துவீச்சாளர்கள் பந்து வீசியுள்ளனர். அதில் கரன் சர்மா மற்றும் பிராவோ தான் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

Source: tamil.crickopedia.com