சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ் போட்டியில் இந்திய அணி அதிக ரன்களை எடுத்து வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியதால், மிகவும் குறைவான ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.
அதனால் இந்திய அணியை வென்ற நியூஸிலாந்து அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்பின்னர் இப்பொழுது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
எதிர்பாராத விதமாக இந்திய டெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுமன் கில் -க்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் சில டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அவருக்கு பதிலாக இந்த மூன்று வீரர்கள் தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளது. யார் அந்த மூன்று வீரர்கள் ?
மயங்க் அகர்வால் :
மயங்க் அகர்வால் தான் முதல் வீரர் சுமன் கில்-க்கு பதிலாக , ஏனென்றால் பல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இவரது ஆட்டம் மிகவும் உதவியாக இருந்துள்ளது. மயங்க் அகர்வால் விளையாடிய 12 போட்டிகளில் 857 ரன்களை அடித்துள்ளார். அதனால் இவர் சரியாக வீரராக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
கே.எல்.ராகுல்:
அடுத்த படியாக கே.எல்.ராகுல் சரியான ஒரு வேராக இருப்பர் ன்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இவர் இறுதியாக டெஸ்ட் போட்டி 2019ஆம் தான் விளையாடியுள்ளார், அதன்பின்னர் இப்பொழுது வரை அவரை டெஸ்ட் போட்டியில் விளையாடவைப்பதில்லை. ஆனால் கே.எல்.ராகுல் தான் முதல் இந்திய வீரர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டியில் 50+ ரன்களை அடித்துள்ளார்.
ஹனுமா விஹாரி:
ராகுல் மற்றும் விஹாரி போல தான் ஹனுமா விஹாரியும், ஐவரும் ஒரு சிறந்த ஒபெநிங் பேட்ஸ்மேன் தான். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இவரது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்துள்ளது. அதனால் சுமன் கில் -க்கு பதிலாக இவரும் ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.