நியூஸிலாந்து : 18 ஆம் தேதி முதல் தொடங்கியது இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள். அதில் முதலில் நடைபெற டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை அடுத்து ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இன்று நடைபெற்று வரும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே தொடர் ட்ராவில் முடியும். அப்படி இல்லாவிட்டால் ஒருநாள் போட்டிக்கான தொடரை நியூஸிலாந்து அணி வென்றுவிடும். இன்று காலை தொடங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் மற்றுமின்றி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய கிரிக்கெட் அணி 47.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 219 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 49, வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது நியூஸிலாந்து அணி. இதுவரை 18 ஓவர் முடிவில் 104 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளனர். இன்னும் 32 ஓவர் மீதமுள்ள நிலையில் 116 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் மழை வந்த காரணத்தால் போட்டி இப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை விளையாடி வரும் ரிஷாப் பண்ட் :
இந்திய அணியின் ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு மிகவும் முக்கியமான இன்றாக தான் இருந்தது. ஆனால் சமீப காலமாகவே இவரது விளையாட்டில் பின்னடைவு ஏற்பட்டு கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில். அதனால் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மூன்றாவது போட்டி தொடங்கும் முன்பு ரிஷாப் பண்ட் -யிடம் பேட்டி எடுத்தார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்கிலே, அதற்கு ரிஷாப் பண்ட் சொன்ன இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி என்ன சொன்னார் ?
கேள்வி (ஹர்ஷா போக்கிலே): இதே கேள்வியை தான் சேவாக்-யிடம் கேட்டேன். அதனை இப்பொழுது உங்களிடம் (ரிஷாப்) கேட்கிறேன். ஒருநாள் மற்றும் டி-20 போட்டியை காட்டிலும் டெஸ்ட் போட்டியில் தான் நீங்க சிறப்பாக விளையாடி வருகிறீர்களா ?
பதில் (ரிஷாப் பண்ட்) : சார், அந்த பதிவுகள் எல்லாம் வெறும் நம்பர் தான். என்னுடைய (ஒருநாள், டி-20) போட்டிக்கான ரன்கள் ஒன்றும் மோசமாக இல்லையே..!
கேள்வி (ஹர்ஷா போக்கிலே): நானும் அதனை மோசம் என்று சொல்லவில்லை, டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்டு பேசுகிறேன்..!
பதில் (ரிஷாப் பண்ட்) ; ஓப்பிட்டு பேசுவது எனக்கு தேவையில்லாத விஷயம். நான் இப்பொழுது 24 – 25 வயதில் இருக்கிறேன். ஒருவேளை என்னுடைய பேட்டிங்-ஐ ஒப்பிட்டு பேசவேண்டுமென்றால் நான் 30-32 வயதிற்கு வந்த பிறகு செய்யுங்கள்.”
ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்படுத்துகிறது உண்மையா ? இல்லையா ?