ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதேபோல சமீபத்தில் தான் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், , சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் இடம்பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி, தீபக் சஹார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம்:

இந்திய அணியில் தோனிக்கு பிறகு பினிஷராக ரிஷாப் பண்ட் தான் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அதனால் இந்திய அணியில் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு காம்பேக் கொடுத்தார்.
அதனால் ரிஷாப் பண்ட் ஆ ? தினேஷ் கார்த்திக் ஆ ? ஏனென்றால் இதில் ஒருவர் மட்டுமே ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக்-க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் யார் இடம்பெற போகிறார் என்று குழப்பம் எழுந்துள்ளது. இதனை அப்ற்றி பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” எனக்கு இருவரையும் (தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷாப் பண்ட்) உலகக்கோப்பை போட்டிக்கும் அதிக போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும்.”

“சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிகளில் இருவருக்கும் சண்டை தான் வந்தது, யார் அணியில் விளையாட வேண்டுமென்று. ஆனால் எனக்கு தினேஷ் கார்த்திக் அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் மூன்று அல்லது நான்கு பந்துகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.”
“ரிஷாப் பண்ட் -க்கும் நிச்சியமாக அதிக போட்டி தேவைப்படுகிறது தான். ஆனால் சீரியஸ் எப்படி போகிறது என்பதை வைத்து தான் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்ய வேண்டும். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு சில இடங்களில் இடது கை பேட்ஸ்மேன் தேவைபடும், ஒரு சில இடங்களில் வலது கை பேட்ஸ்மேன் தேவைப்படும். “
“அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது தான் மிகவும் முக்கியமான ஒன்று. இதனை சமாளித்து கொண்டு தான் விளையாட வேண்டும். ஏனென்றால் வெறும் 11 பேர் வைத்து தான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
0 Comments