இதை யாரும் கவனிக்கலையா?? ஜெர்சியில் முக்கியமான விஷயத்தை மறைத்து ஆடிய ரிஷப் பண்ட்!! எதற்க்காக மறைத்தார்.. அப்படி அதில் என்ன இருந்தது?? வெளியான உண்மை காரணம்!!

2-வது டி20 போட்டியின்போது தனது உடையில் சில விஷயங்களை மறைத்து விளையாடியிருக்கிறார் ரிஷப் பண்ட். அதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் போது, விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப் பண்ட் தனது ஜெர்ஸியின் நெஞ்சுப்பகுதியில் டேப் வைத்து மறைத்து விளையாடினார். இவர் எதை மறைத்து விளையாடுகிறார் என பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது. 

இரு அணிகள் மோதும் தொடரின்போது, நெஞ்சுப்பகுதியில் ஸ்பான்சர்ஸ் லோகோ இடம் பெற்றிருக்கும். அச்சமயம் ஐசிசி லோகோ பயன்படுத்த அனுமதி இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே ஐசிசியின் லோகோ பயன்படுத்த எந்த ஒரு அணிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 
 
வேறுவழியின்றி, இரண்டாவது போட்டியில், உலககோப்பையின்போது கொடுக்கப்பட்ட ஜெர்சியை ரிஷப் பண்ட் பயன்படுத்தினார். எனவே அதில் இருந்த ஐசிசி லோகோவை மறைத்தபடி விளையாடுவதே சரியாக இருக்கும் என்பதால் அதனை டேப் மூலம் மறைத்து விளையாடினார்.

இப்போட்டியில் இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த துவக்க வீரர்கள் கே எல் ராகுல் 65 ரன்களும், ரோகித் சர்மா 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட், 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசி, அணியின் வெற்றியை உறுதி செய்தார். 17.2 ஓவர்களில் 155 ரன்கள் அடித்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது

2-வது டி20 போட்டியில், சிராஜ் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்ஷல் பட்டேல் உள்ளே எடுத்து வரப்பட்டார். இதுவே அவருக்கு அறிமுக போட்டியாகும். ஆனால் இது அவருக்கு முதல் போட்டி என்பது போலவே தெரியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. 

அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு வெகுசில இந்திய வீரர்களில் இவரும் ஒருவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.