HomeTrending Newsநல்ல வேலை இவரவது ரன்களை அடித்தரே ; இல்லைன்னா இந்திய நிலைமை ? பெருமூச்சு...

நல்ல வேலை இவரவது ரன்களை அடித்தரே ; இல்லைன்னா இந்திய நிலைமை ? பெருமூச்சு விட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

இன்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரும் 70 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் விராட்கோலி அதிக ரன்களை அடிப்பார் என்று, ஆனால் ஒரு ரன்களை கூட அடிக்க முடியமால் ஆட்டம் இழந்துள்ளார். இந்திய அணி அவ்வளவு தான் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் தான்,

சிங்கம் போல களமிறங்கியுள்ளார் ரிஷாப் பண்ட் அதிரடியாக விளையாடி 85 ரன்களை அடித்துள்ளார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 287 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 55, ஷிகர் தவான் 29, விராட்கோலி 0, ரிஷாப் பண்ட் 85, ஷ்ரேயாஸ் ஐயர் 11, வெங்கடேஷ் ஐயர் 22 , ஷர்டுல் தாகூர் 40, ரவிச்சந்திரன் அஸ்வின் 22 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியுள்ளது தென்னாபிரிக்கா அணி. முதல் போட்டியில் 296 ரன்களை அடித்த தென்னாபிரிக்கா அணிக்கு 288 ரன்களை அடிப்பது கடினமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் முதல் சில ஓவரில் சில விக்கெட்டை கைப்பற்றினால் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இந்திய அணி இவ்வளவு ரன்களை அடிக்க முக்கியமான காரணமே நம்ம விக்கெட் கீப்பர் தான். ஆமாம்…! முதல் ரிஷாப் பண்ட் முதல் போட்டியில் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், இப்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 85 ரன்களை அடித்துள்ளார். அதனால் தான் இந்திய அணி அதிக ரன்களை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

இன்றைய போட்டியில் நிச்சியமாக இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த போட்டியில் விளையாட அர்த்தம் இருக்கும் . இல்லையென்றால் நிச்சியமாக இந்திய அணி தொடரை கைப்பற்ற வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img