எங்கள் அணியின் விராட் கோலியும் இவர்தான் கேன் வில்லியம்சனும் இவர்தான் ; ரிக்கி பாண்டிங்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதனை குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எங்கள் அணியின் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் தான்.

இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரிஷாப் பண்ட் , கோலியை போல இறுதிவராய் பொடியை வழிநடத்தி சென்றுள்ளார். அதைவிட ரிஷாப் பண்ட் பேட்டிங் பொசிஷன் மிகச்சரியாக உள்ளது. மூன்று விதமான போட்டிகளிலும் (டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள்) மிக அற்புதமாக பேட்டிங் செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் 2021 டி-20 போட்டியில் நல்ல பாசிட்டிவ் ஆக விளையாட துவங்கியுள்ளார். பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங் செய்வதிலும் மிகசிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நிச்சியமாக அடுத்த 12 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றுமின்றி நல்ல பேட்ஸ்மேனும் கூட என்று கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பலமாக அடிபட்டதால் அவரால் மீதமுள்ள போட்டிகளிலும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷாப் பண்ட் பதவியை பெற்றார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கான அடுத்த போட்டி வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியை எதிர்கொள்ள போகிறது. இந்த போட்டியில் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.