டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் இவர் தான் : உரிமையாளர் அதிரடி முடிவு…..!

0

ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டையில் பலமாக அடிபட்டுள்ளது.

அதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது ஆப்ரேஷன் செய்யும் நிலைமை கூட வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அப்படி செய்தால் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சியமாக குறைந்தது 4 மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் , இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரஹானே ஆகிய மூன்று வீரர்களையும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.

அதனால் டெல்லி அணியின் கேப்டன் மாறுமா என்று கேள்வி சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் ; டெல்லி அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் , ரஹானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டன் என்று கூறியுள்ளனர்.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதி போட்டிவரை சிறப்பான முறையில் அணியை வழிநடத்தியுள்ளார் ஐயர் என்று கூறியுள்ளனர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர். ஆனால் இப்பொழுது ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிபட்டதால் அடுத்த கேப்டன் யாரை இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள ரவிச்சந்திர அஸ்வின் , ரஹானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கேப்டன் மற்றும் அணியை வழிநடத்த அனுபவம் அதிகமாகவே உள்ளது. அதனால் இவர்களில் யாரவது ஒருவர் கேப்டனா என்று பல கேள்வி எழுந்தன.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் தான் என்று டெல்லி அணியின் உரிமையாளர் அதிரடியாக கூறியுள்ளார். டெல்லி அணியின் மிகவும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து ரன்களை குவித்துள்ளார் ரிஷாப் பண்ட்.

நன் வளர்ந்தது டெல்லி தான், கடந்த ஆறு ஆண்டுகளாக நான் டெல்லி அணியில் தான் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது நான் கேப்டன் என்ற செய்தி கேட்ட உடன் நான் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளேன். இது என்னுடைய கனவு, அது இப்பொழுது நடந்துள்ளது. எனக்கு மிகவும் அதிகம் பொறுப்பு வந்துள்ளது. அதனால் நிச்சியமாக என்னுடைய 100% சதவீத உழைப்பையும் நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here